Also Watch
Read this
By: Web Team

அருணாச்சலேசுவரர் கோயில் திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் வாகனங்களுக்கு மராமத்து பணி மற்றும் வண்ணம் பூசுதல் பணி தொடங்கியுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
இந்த ஆண்டு, திருக்கார்த்திகை தீபத் திருவிழா, நவம்பர் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, டிசம்பர் 3ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு, பூர்வாங்க பணிகளை தொடங்க கடந்த மாதம் 24ஆம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று, அருணாச்சலேஸ்வரர் கோயிலின் ராஜ கோபுரம் எதிரில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள பஞ்ச மூர்த்திகள் வாகனங்களுக்கு மராமத்து பணி மற்றும் வண்ணம் பூசுதல் பணி தொடங்கியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved