தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பொறுத்த வரை, கம்பேரிசன் தான் உள்ளதே தவிர, கண்ட்ரோல் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் விமர்சனம் செய்தார். பெண்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவர்களை அது இது என்றுதான் திமுகவினர் பேசுவதாக வேதனை தெரிவித்தவர், மரியாதையாக பேசுவதற்கு திமுக அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்த வேண்டும் என்றார்.