news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்பது வதந்தி
tv

Also Watch

tv

Read this

"பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்பது வதந்தி

”90 நாட்களுக்கு கையிருப்பு உள்ளது"

42

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழகம் முழுவதும் சுமார் 7000 பெட்ரோல் நிலையங்களில், எரிபொருள் விநியோகம் சீராக உள்ளது என்று, தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கத்தின் தலைவர் முரளி விளக்கம் அமளித்துள்ளார்.

சீரான விநியோகம்
கடலூரில், பெட்ரோலிய வணிகர் சங்கத்தின் மாநில தலைவர் முரளி கூறியதாவது;
தமிழகம் முழுவதும் உள்ள 7,000 பெட்ரோல் நிலையங்களில் எந்தவித பெட்ரோல் தட்டுப்பாடும் இல்லை; விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது. டீலர்களுக்கு கடன் வழங்குவது மட்டுமே நிறுத்தப்பட்டு உள்ளது. மற்றபடி, முழு அளவில் பெட்ரோல் விநியோகம் உள்ளது. ஒவ்வொரு டீலரும் மூன்று நாட்களுக்கு உரிய இருப்பை எப்போதும் வைத்து இருப்பார்கள். நாளை பெட்ரோல் இருக்காது என்பது பொதுமக்களின் கருத்து தான், ஆனால் எந்த தட்டுப்பாடும் இல்லை. அதிக அளவில் பொதுமக்கள், கேனில் பெட்ரோல் வாங்கி வருகின்றனர். இது, அபாயகரமானது.

செயற்கையான தட்டுப்பாடு
சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் பெட்ரோல் கிடைக்கும். தமிழகம் முழுவதும் 7000 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. எங்கும் தட்டுப்பாடு கிடையாது. பொதுமக்கள் அதிக அளவில் பெட்ரோல் வாங்கி வருவது செயற்கை தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும். வணிக எரிவாயு சிலிண்டர் நிறுத்தப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக ஓட்டல்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அடுத்தபடியாக பெட்ரோலும் தட்டுப்பாடு வரும் என பொதுமக்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது. இரண்டு மடங்கு அதிகரித்துள்ள காரணத்தினால் செயற்கை பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது
இவ்வாறு முரளி தெரிவித்து உள்ளார்.

Related Link
அச்சம், பதற்றம் வேண்டாம், முதல்வர் அறிவுறுத்தல்

அச்சம், பதற்றம் வேண்டாம், முதல்வர் அறிவுறுத்தல்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளதாக ஈரான் கூறியது

0
21 mins agoshare
Trumph








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved