நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். அப்பாபாளையம் பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளியான பழனிசாமி என்பவர், விட்டலபுரி பகுதியில் உள்ள ஒரு கடைக்கு வெளியே நிறுத்திருந்த இருசக்கர வாகனத்தை இருவர் திருடி சென்றனர். இது குறித்து பழனிசாமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் பைக்கை திருடிய காட்டூர் பகுதியை சேர்ந்த ரெங்கராஜ், பழனிசாமி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.