கோவை மாவட்டம் செல்வபுரம் காவல் நிலையம் முன்பாக ரீஸ்ஸ் செய்து வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். செல்வபுரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் காவல் நிலையம் முன்பாக நின்று சினிமா பட வசனங்களுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டார். இந்த வீடியோ போலீசார் கண் பார்வைக்கு வரவே, சந்தோஷ் குமாரை கைது செய்தனர். குற்ற நோக்கத்துடன் செயல்படுதல், சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.