ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய இளைஞர் கடுமையாக தாக்கப்பட்டது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாககூறி இளம்பெண்ணிடம் அடிக்கடி பேசிய இளைஞர். தந்தைக்கு தெரிந்த நபர் தானே என நம்பி இளம்பெண்ணும் பேச்சு. ஒருகட்டத்தில் ஆபாச மெசேஜ் அனுப்புவது, உன் கணவரை விட்டுவிட்டு வந்துவிடு, நாம் சேர்ந்து வாழலாம் என எல்லைமீறிய இளைஞர். ஏற்கனவே திருமணமான பெண் என தெரிந்தும் திருமணம் செய்து கொள்ளலாம் என அத்துமீறிய இளைஞர் பிடிபட்டாரா? அந்த இளைஞர் மீது போலீசார் எடுத்த நடவடிக்கை என்ன?அப்பாவுக்கு தெரிஞ்ச நபரான முனியப்பன்கிட்ட இருந்து இப்படி ஒரு எஸ்எம்எஸ் வரும்ன்னு எதிர்பார்க்காத இளம்பெண், அந்த மெசேஜை தன்னோட கணவர்கிட்ட காமிச்சிருக்காங்க. அந்த மெசேஜை பாத்து அதிர்ச்சியான இளம்பெண்ணோட கணவர், பணம் ஏற்பாடு பண்ணிட்டோம், ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து வாங்கிக்கோங்கன்னு ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப சொல்லிருக்காரு. கணவர் சொன்னபடியே முனியப்பனுக்கு இளம்பெண் எஸ்எம்எஸ் அனுப்பிருக்காங்க. அந்த எஸ்எம்எஸ பாத்ததும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்துருக்காரு முனியப்பன்.ஆனா, அங்க நடக்கப்போற விஷயத்த முனியப்பன் கொஞ்சம்கூட எதிர்பாத்துருக்க மாட்டாரு. இளம்பெண், அவரோட கணவர், உறவினர்கள் எல்லாரும் சேர்ந்து முனியப்பன புரட்டி எடுத்துருக்காங்க. அப்போ, அங்க பாதுகாப்புக்காக நின்னுட்டு இருந்த காவலர்கள், இளம்பெண்கிட்ட நடத்துன விசாரணையில தான் முனியப்பனை ஏன் அவங்க அடிச்சாங்க? இளம்பெண்ணுக்கு முனியப்பன் அப்படி என்ன எஸ்எம்எஸ் அனுப்பினாருனு எல்லா கேள்விகளுக்குமே விடை கிடைச்சது.தருமபுரி, கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தான் முனியப்பன். 30 வயசான இளைஞர் 55 வயசான ஒருத்தர்கிட்ட நட்போட பழகிருக்காரு. அப்போ, தன் பொண்ணு படிச்சிட்டு சும்மா தான் இருக்கா, நல்ல வேலைக்கு அனுப்பணும்னு சொல்லிருக்காரு அந்த நபர். அதுக்கு, தனக்கு ஆட்சியர் அலுவலகத்துல வேலை பாக்குற நிறையபேரை தெரியும், அவங்ககிட்ட சொல்லி உங்க மகளுக்கு வேலை வாங்கி தர்றதா சொல்லிருக்காரு முனியப்பன்.அத நம்புன அந்த நபர், தன்னோட மகள் போன் நம்பரை குடுத்து ஏதாவது வேலை விஷயமா பேசணும்னா பேசிக்கோங்கனு சொல்லிருக்காரு. அடுத்து அந்த நபரோட பொண்ணுக்கு போன் பண்ணின முனியப்பன், உங்களுக்கு வேலை வாங்கி தர்றதா உங்க அப்பாகிட்ட சொல்லிருக்கேன், அதுக்கு முன்பணமா ஒரு லட்சம் ஏற்பாடு பண்ணனும்னு சொல்லிருக்காரு. அடுத்து வேலை விஷயமா தினமும் போன் பண்றது, மெசேஜ் அனுப்புறதுனு இளம்பெண்கிட்ட பேசிட்டே இருந்துருக்காரு. ஒரு கட்டத்துல ஆபாசமா எஸ்எம்எஸ் அனுப்பிருக்காரு முனியப்பன். ஏற்கெனவே கல்யாணமான பெண் அப்டினு தெரிஞ்சும் அந்த பெண்கிட்ட எல்லைமீறுன முனியப்பன், உன் கணவரை விட்டுட்டு வந்துரு, இந்த ஊரவிட்டே போய்ரலாம், நான் காலம் முழுக்க கண்கலங்காம பாத்துக்குறேனு எஸ்எம்எஸ் அனுப்பிருக்காரு. அந்த எஸ்எம்ஸ்ஸை பாத்து ஷாக் ஆன இளம்பெண் தன் கணவர்கிட்ட காட்டிருக்காங்க.ஏற்கனவே வேலை விஷயமா முனியப்பன் தன் மனைவிக்கிட்ட பேசுறது அந்த இளம்பெண்ணோட கணவருக்கு தெரியும். அதனால அதையே சாதகமா வச்சி முனியப்பனை சுத்தி வளைச்சி பிடிக்கணும்னு முடிவு பண்ணின இளம்பெண்ணோட கணவர், வேலைக்கான முன்பணம் ஒரு லட்சத்த ஏற்பாடு பண்ணிட்டோம், ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து வாங்கிக்கோங்கனு தன் மனைவிய முனியப்பனுக்கு எஸ்எம்எஸ்ல அனுப்ப வச்சிருக்காரு. கணவர் சொன்ன மாதிரியே மனைவியும் எஸ்எம்எஸ் அனுப்பிருக்காங்க. அடுத்த சில நிமிடங்கள்ல தன் உறவினர்களோட ஆட்சியர் அலுவலகத்துக்கு போய்ட்டாரு இளம்பெண்ணோட கணவர். அதேமோதிரி பணம் வாங்குறதுக்காக முனியப்பனும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வர, இளம்பெண்ணோட கணவர், உறவினர்கள் சேர்ந்து சுத்தி வளைச்சி அடிச்சிருக்காங்க. அதுக்குப்பிறகு போலீசார் நடத்துன விசாரணையில் மொத்த உண்மையும் வெளியில வந்துருக்குது.அடுத்து முனியப்பன் மேல வழக்குப்பதிவு பண்ணின போலீசார் கைது பண்ணி விசாரணை நடத்திருக்காங்க. அதுல, முனியப்பன் ஒரு இளம்பெண்ணை மட்டும் ஏமாத்தல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துல வேலை வாங்கி தர்றதா சொல்லி பல இளம்பெண்களை ஏமாத்துனதோட, பாலியல் அத்துமீறல்ல ஈடுபட்டுருக்குறதும் தெரியவந்துச்சு. இளம்பெண்ணோட கணவர் குடுத்த ஐடியாவால வசமா சிக்குன முனியப்பன் இப்ப சிறையில் கம்பி எண்ணிட்டு இருக்காரு.இதையும் பாருங்கள் - Chennai Ganja Attack | காட்டி கொடுத்த மாஜி நண்பன் கதையை முடிக்க ஜெயிலுக்குள்ளேயே Plan | Crime News