கன்னியாகுமரியில் குண்டும் குழியுமாக கிடந்த சாலையை அவசர அவசரமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களை அதிரடியாக தடுத்து நிறுத்திய விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர், சாலையில் லட்சணத்தை அமைச்சர் எ.வ.வேலு நேரில் வந்து பார்க்கட்டும் என வாக்குவாதம் செய்தார். சீரமைப்பு பணியும் ஒருமழைக்குகூட தாங்காது என ஜல்லியை கையில் அள்ளிக்காட்டி எம்.எல்.ஏ. தாரகை கத்பட் கொந்தளித்தார்.