பூப்பறிக்க செல்லவில்லை என கூறி திருப்பத்தூர் அருகே கணவனை, மனைவியும், மகனும் சேர்ந்து மண்வெட்டியால் அடித்து கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுப்பூங்குளம் குமரன் நகர் பகுதியை சேர்ந்த காந்தி, பட்டன் ரோஸ் பூ பயிரிட்டு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் காலையில் மழை பெய்ததால் பூப்பறிக்க தாமதமாக செல்வதாக கூறியுள்ளார். இதனால் அவருடைய மனைவி கலைச்செல்வி மற்றும் மகன் ராஜீவ் காந்தி ஆகியோர் வாக்குவாதம் செய்ததோடு, ஆத்திரத்தில் மண்வெட்டியால் அடித்துள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த காந்தி, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.