news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மர்ம நபர் பூட்டை உடைத்த வீடியோ காட்சி வெளியானது
tv

Also Watch

tv

Read this

மர்ம நபர் பூட்டை உடைத்த வீடியோ காட்சி வெளியானது

புல்லுக்காடு, கோவை

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பூட்டியிருந்த வீட்டை உடைத்த மர்ம நபர்

பூட்டை உடைத்த வீடியோ : 

கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் 26 கட்டிடங்களில் சுமார் 2000 குடியிருப்புகள் உள்ளன.அதில் பல வீடுகளில் ஆட்கள் இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டிருப்பதாகவும் அங்கு அவ்வப்போது இளைஞர்கள் சிலர் வந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி வருவதாகவும்.

சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.இந்த நிலையில் இன்று மாலை 18 ஆவது பிளாக் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் ஆறு
மாதத்திற்கும் மேலாக பூட்டி இருந்த வீட்டின் பூட்டை மர்ம நபர் ஒருவர் ஏற்கனவே தான் கொண்டு வந்திருந்த இரும்பு ஆயுதங்களால் உடைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அதனை கண்ட அருகில் வசித்து வரும் பொதுமக்கள் நீங்கள் யார் எதற்காக வீட்டின் பூட்டை உடைக்கிறீர்கள் என்று கேட்கவே அந்த நபர் தட்டிக்கேட்ட அக்கம்பக்கத்தினரையும் கடுமையாக பேசி தாக்க முற்பட்டுள்ளார்.

இதற்கிடையே அந்த நபர் வீட்டின் பூட்டை உடைப்பதை அங்கிருந்தவர்கள் தங்களது கைப்பேசியில் வீடியோவாக பதிவு செய்த நிலையில் தற்பொழுது அந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் பல வீடுகள் கேரள மாநிலத்தில் வசித்து வருபவர்களுக்கு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு சமூக விரோத செயல்களுக்கான புகலிடமாக விளங்குவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Related Link
மூட்டை மூட்டையாக ஆவணங்கள் தீ வைத்து எரிப்பு

மூட்டை மூட்டையாக ஆவணங்கள் தீ வைத்து எரிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

0
10 hrs 40 mins agoshare
Gold rate








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved