Also Watch
Read this
By: Manigandan Raja

திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு :
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நடிக்கும் "அப்பா குட்டி" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கிறது.
தந்தை - மகள் இடையேயான உறவை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்தில், நடிகை பிரீத்தி அஸ்ரானி, பகவதி பெருமாள், ஜென்ஸன் திவாகர், அருவி மதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கில் "நாநாகுட்டி" என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடே கொண்டாட்டத்தில் உள்ளதாக ஜோதிகா உற்சாகம் :
சூர்யா - த்ரிஷா நடித்த "கருப்பு" திரைப்பட வெற்றியால் வீடே கொண்டாட்டத்தில் உள்ளதாக, நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த சூழலில், கருப்பு திரைப்படத்திற்கு கிடைத்த அன்பைக் கண்டு நெகிழ்ந்து போயிருப்பதாகவும், கடைசி 10 நிமிடங்கள் சூர்யா பிரமாதமாக நடித்திருப்பதாகவும் ஜோதிகா தெரிவித்துள்ளார்.
அடுத்த படம் குறித்து பகிர்ந்த இயக்குநர் Prashanth Neel :

இருபது ஆண்டுகளாக உருவாக்க காத்திருந்த புராணக் கதையம்சம் கொண்ட, கலர்ஃபுல்லான ஒரு பிரம்மாண்ட படத்தை அடுத்ததாக இயக்கப் போவதாக இயக்குநர் Prashanth Neel தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்.
இந்தப் படம் Ajith Kumar நடிப்பில் உருவானால் தான் சரியான கூட்டணியாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் எனவும், சமீப காலமாக கோலிவுட்டில் PAN இந்திய அளவிலான பிரம்மாண்ட படங்கள் குறைந்து விட்டதாக பேசப்படுகிறது என்றார்.
ஜார்ஜ்குட்டியை குடும்பமாக ஏற்றுக் கொண்டதற்கு நன்றி :

"த்ரிஷ்யம்-3" திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஜார்ஜ்குட்டியை குடும்பமாக ஏற்றுக் கொண்டதற்கு நன்றி என நடிகர் மோகன்லால் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘த்ரிஷ்யம் 3' திரைப்படம் மிகுந்த அன்பு மற்றும் நன்றியுணர்வோடு உருவாக்கப்பட்டதாகவும், அதற்கு மக்கள் கொடுத்து வரும் அன்பு தன்னை ஆழமாக நெகிழ வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பாக்ஸ் ஆபிஸ் வசூலைவிட, மக்களின் விமர்சனங்களும் உணர்வுகளும்தான் தனக்கு மிகவும் மதிப்புமிக்கவை எனவும் தெரிவித்துள்ளார்.
நடிகர் மாதவன் நடிக்கும் "G.D.N." திரைப்படம் :

நடிகர் மாதவன் நடிக்கும் "G.D.N." திரைப்படம் ஜூலை 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார்.
இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி, யோகி பாபு மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரும் நடித்துள்ளனர். வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் மாதவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved