அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கடலாடியில் கட்சி கொடி ஏற்றி கழக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்தார். அ.பு.த.ம.மு.க. சின்னம் அறிமுகம்அதைத் தொடர்ந்து இன்று அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சி பெயரை அறிமுகம் செய்து பின்னர் கட்சியின் சின்னமான தென்னந்தோப்பு சின்னத்தை அறிமுகம் செய்தார்.கொடியேற்றி இனிப்பு வழங்கிய கட்சி நிர்வாகிஇந்நிலியில் இதனை போற்றும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் ராமநாதபுரம் முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரன் மகன் ரமேஷ்குமார் கழகக் கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். கொடியேற்ற நிகழ்ச்சியில் அ.பு.த.ம.மு.கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். Related Link D.S.P.மகேஷ் செய்த தரமான சம்பவம்