Also Watch
Read this
10 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காணப்படும் சாலை.. விரைந்து சாலை அமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை
குண்டும் குழியுமாக காணப்படும் சாலை
Updated: Sep 13, 2024 12:03 PM
சென்னையை அடுத்த மாங்காட்டில் கடந்த 10 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை விரைந்து சீரமைத்து தர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாங்காடு நகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு ஜனனி நகர் அனெக்ஸ் சாலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
ஆனால் இங்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதால் அவசர தேவைக்கு கூட வாகனங்களை எடுத்து செல்ல முடியாத நிலை உள்ளது.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved