ஆந்திராவில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு எதிரொலியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்படும் தக்காளி, பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆந்திராவில் மழை வெள்ள பாதிப்பால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, தமிழகத்துக்கு வரத்து குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் கிருஷ்ணகிரிக்கு படையெடுப்பதால், தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 0 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் ஒரு கிலோ தக்காளி அனைத்து செலவுகளையும் சேர்த்து 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 600 முதல் 1000 ரூபாய் வரை விற்பனையான 25 கிலோ எடையிலான ஒரு பெட்டி தக்காளி 1,600 முதல் 1,800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.