வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த வி.கோட்டா சாலையில் சுமார் 14 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சுமார் 1 மணி நேரமாக சாலையை கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். சாலையின் நடுவே நீண்ட நேரமாக இருந்த மலைப்பாம்பு பின்னர் ஊர்ந்து புதருக்குள் சென்றது.