கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பல இடங்களில் திருடி கைவரிசை காட்டிய திருடனை போலீசார் வாகன தணிக்கையின் போது கைது செய்தனர். திராசு பகுதியை சேர்ந்த ஜெயராம் என்பவரின் 5 ஆடுகளை கடந்த 8 ஆம் தேதி மர்ம நபர்கள் காரில் திருடி சென்றதாக கூறப்படுகிறது.இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். இதனிடையே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், பைக்கில் வந்த நபரை பிடித்து சோதனை செய்ததில் ஆடுகளை திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் மீது 15 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.