திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சாலையில் விழுந்தவர் மீது மோதாமல் இருக்க, பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திருத்துறைப்பூண்டி நோக்கி 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் தடுமாறி கீழே விழுந்த நிலையில்,அவர் மீது மோதாமல் இருக்க பேருந்தை ஓட்டுநர் சாமர்த்தியமாக திருப்பி வாய்க்காலில் இறக்கினார். இதில் நல்வாய்ப்பாக பேருந்து கவிழாததால், பயணிகள் உயிர் தப்பினர்.