திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே திருமணம் தாண்டிய உறவில் பிறந்த குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த தாய் உள்ளிட்ட 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். வலங்கைமான் அருகே ஆவூர் பகுதியை சேர்ந்த சுகந்தி என்பவரின் கணவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவருக்கு அதே பகுதியை சேர்ந்த 25 இளைஞருடன் திருமணம் தாண்டிய உறவு இருந்துள்ளது. இதனால் கடந்த 10 மாதத்திற்கு முன்பு சுகந்திக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், அதனை வீட்டு உரிமையாளர் சமீதா பானு, பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் உள்ள அவரது உறவினருக்கு விற்று கொடுத்துள்ளார். இதனை அறிந்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகார் அடிப்படையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.