சென்னையில் மீன் வாங்கி விற்பனை செய்ய வந்த நபர், கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவொற்றியூர் நேதாஜி நகரை சேர்ந்த அருண்,கடந்த 15ஆம் தேதி மீன் வாங்குவதற்காக காசிமேடு சந்தைக்கு சென்ற நிலையில் காணாமல் போனார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அருணின் சடலம் காசிமேடு பகுதி கடலில் மிதந்தது தெரியவந்தது.