மதுரையில் நடைபயற்சி மேற்கொண்ட வழக்கறிஞரை முன்விரோதம் காரணமாக கல் மற்றும் கம்பால் தாக்கி கொலை செய்த வழக்கில், 3 பேரை போலீஸார் கைது செய்தனர். வண்டியூர் பாலாஜிநகரை சேர்ந்த வழக்கறிஞர் பகலவன், கடந்த 4 ஆம் தேதியன்று வீட்டிற்கு அருகில் நடைப்பயற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, அங்கு சென்ற 3 பேர் அவரை பின்தொடர்ந்து சென்று வாக்குவாதம் செய்து கல் மற்றும் கம்பால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயம் அடைந்த வழக்கறிஞர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வழக்கறிஞர் கொலை தொடர்பாக ராம்குமார், அருண்பாண்டி மற்றும் மணிமாறன் கைது செய்யப்பட்டனர்.