தருமபுரி அருகே சொத்துத் தகராறில் தாத்தாவை பேரன் வெட்டியது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் புகாரை ஏற்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கே.என்.சவுளூர் கிராமத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு 2 மகள்கள், 3 மகன்கள். இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில், மூத்த மகன் முருகன் அவருக்கு பாத்தியப்பட்ட இடத்தில் வீடு கட்டி வரும் நிலையில், அங்கு சென்ற 2 வது மகன் சேட்டு மற்றும் அவரது மகன் தங்கராஜ் ஆகிய இருவரும், சொத்தின் பாக பிரிவினையில் பிரச்னை இருப்பதால் வீடு கட்டக்கூடாது என தகராறு செய்ய, மாரியப்பன் அதனை தட்டி கேட்டதாக கூறப்படுகிறது.இதில் ஆத்திரமடைந்த தங்கராஜ் அரிவாளால் மாரியப்பனை சரமாரியாக வெட்டியதில் அவர் படுகாயம் அடைந்தார்.