சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மலை கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அருநூத்துமலை கிராமத்தில் உள்ள வெள்ளை பிள்ளையார் மற்றும் பெருமாள் கோவில் திருவிழாவில், கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பக்தர்களை காளைகள் தாண்டிச் சென்ற நிலையில், 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலை சுற்றி வந்தனர்.