பொடாரன் நிறுவனத்தின் டிலோ குளிர்பானத்தை போல் போலி குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்த ஐந்து நிறுவனங்களுக்கு சீல் வைத்து அமலாக்கப் பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. திருப்பூர் காங்கேயம் பகுதியில் 56 ஆண்டுகளாக இயங்கி வரும் பொடாரன் நிறுவனம், அனைத்து அறிவுசார் சொத்துரிமை சட்டத்தில் பதிவு செய்து, அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைபிடித்து வருவதாகவும்.ஆனால் சில நிறுவனங்கள், 'டிலோ' என்கிற பெயரில் லோகோவில் சிறிய மாறுதல்கள் செய்து, போலி குளிர்பானங்களை தயாரித்து விற்பனை செய்து வருவதாகவும் புகார் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் தரமான பொருட்களை வாக்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.