கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் பேரூராட்சியில் ஆமை வேகத்தில் நடைபெறும் அம்ரூத் திட்டப்பணிகளை விரைந்து முடித்து தோண்டப்பட்ட பள்ளங்களை மூட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காவேரிப்பட்டினம் பேரூராட்சியில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில்,6.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அம்ருத் திட்டத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி கடந்த மார்ச் மாதம் துவங்கி நடைப்பெற்று வருகிறது.இந்நிலையில், குழாய்கள் பதிக்க தோண்டபட்ட பள்ளங்களை மூடாமல் இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக குற்றம் சாட்டும் அப்பகுதியினர், பணிகளை விரைந்து முடித்து பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.