தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது சில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில், 39.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டின் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.