கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோவில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட விபூதி, மஞ்சள் பொடி, திரவியபொடி ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது.