விருதுநகர் மாவட்டம் கோவிந்தநல்லூர் கிராமத்தில் 3 மாதங்களாக செயல்படாமல் இருந்த பட்டாசு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.