திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வாகைகுளம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்த மாணவர்களின் புத்தகங்கள் எரிந்து சேதமடைந்தன. அரசு உதவி பெறும் ST. PAUL'S பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், வகுப்பறையில் இருந்த மாணவர்களின் புத்தகங்கள் தீயில் எரிந்திருந்தன. இதனை கண்டு அதிர்சியடைந்த தலைமை ஆசிரியர் ஞான ராஜ் மானூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இந்நிலையில், யாரேனும் தீயிட்டு எரித்தனரா அல்லது பட்டாசு வெடிக்கும் போது தீப்பொறி பட்டு புத்தகங்கள் எரிந்தனவா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.