நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரத்தில் தனியார் கல்லூரி மாணவர், தனது காதலியிடம் பேசமுடியவில்லை என கூறி, விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரதீப்ராஜ் காதல், பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்ததால், காதலனுடன் பேசவிடாமல் பெற்றோர் தடுத்ததாக கூறப்படுகிறது.