காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையினரை கண்டித்து, 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கருப்பு கொடி கட்டி காரைக்கால் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 3 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், இலங்கை அரசால் 40 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் 9 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கும், நடவடிக்கை எடுக்காத மத்திய மற்றும் புதுச்சேரி மாநில அரசை கண்டித்தும் காரைக்கால் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.