நாமக்கலில் நீர் நிலை ஓடை பகுதிகளை ஆக்கிரமித்த பிரபல தனியார் ஸ்பின்னிங் மில்லின் கட்டடங்கள் மற்றும் சுற்று சுவரை இடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். ஓடை பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மற்றும் ஊர்மக்கள் புகார் தெரிவித்தனர்.