நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், அடிபட்டு டிரான்ஸ்பார்மரில் தொங்கிய குருவியை எடுக்க முயன்ற 12 வயது சிறுவன், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான். திருச்செங்கோட்டை சேர்ந்த ரத்தினவேலு என்பவரின் மகன் மோனிஷ், எட்டிமடை பகுதியில் நண்பர்களுடன் குருவி பிடிக்க சென்றபோது, உண்டி வில்லில் அடிபட்டு டிரான்ஸ்பார்மரில் தொங்கிய குருவியை எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கியது.