சட்டப்பேரவை பொது கணக்குக் குழு கூட்டத்துக்கு மாவட்ட எஸ்.பி. வராதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் ஆய்வு செய்த பிறகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு எஸ்.பி. சண்முகம் வராததால், குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகையும், அதிமுக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.