வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த அலமேலு என்பவரின் மகன் மதன்குமார். இவருக்கு திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையாகி இருந்த மகன் குடித்துவிட்டு வந்து பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் தினம்தோறும் கொடுமைசெய்து வந்ததாக கூறப்படுகிறது. குடித்து விட்டு வந்த மகன் வீட்டில் இருந்த தனது தாயை அடித்து, உதைத்து புடவையால் கழுத்தை நெரித்துள்ளார். அதுமட்டுமின்றி, செங்கல்லால் தாயை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாத அலமேலு தனது மகனின் இரு கால்களையும் பிடித்து கொண்டு ‘என்னை அடிக்காதே மகனே, உடம்பு ரொம்ப வலிக்கிறது’ என்று கதறியுள்ளார். தனது தாய் பாசத்தை உதறி தள்ளிவிட்டு கல் நெஞ்சம் படைத்த அந்த மகன் அடித்து உதைத்து கொடுமை படுத்தும் வீடியோ தற்போது சமூகவலை தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.