தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மதுபோதையில் தகராறு செய்ததால் தட்டிக்கேட்ட வியாபாரிகளை இளைஞர்கள் பட்டாக்கத்தியை காட்டி மிரட்டிய அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கடமலைக்குண்டு கிராமத்தில், கடைகளின் முன் 3 இளைஞர்கள் மதுபோதையில் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் தள்ளிவிட முயன்றதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட வியாபாரிகளை அவர்கள் பட்டாக்கத்தியால் வெட்ட முயன்று துரத்தியுள்ளனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சதீஷ், கருப்பசாமி, காமாட்சி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.