ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோவிலில் நடைபெற்ற சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூச்சொரிதல் விழாவின் ஒரு பகுதியாக, அம்மனுக்கு 16 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.