ராமநாதபுரத்தில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வனத்துறை அலுவலரை கண்டித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. கீழக்கரை வனத்துறை அலுவலர் செந்தில்குமார், வனத்துறை அலுவலகம் வழியாக சென்ற பெண்ணை அழைத்து அவரிடம் பாலியல் ரீதியாக பேசியதாக கூறப்படுகிறது.இது குறித்து அப்பெண் அவரது உறவினர்களிடம் தெரிவித்தன் பேரில், கீழக்கரை வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த போலீசாருடன் அவர்கள் வாக்குவாதம் செய்ததால் அங்கு பரப்பு நிலவியது.இது குறித்து புகாரில் வனச்சரங்க அலுவலர் செந்தில்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.