கள்ளக்குறிச்சி அருகே ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாக தனிநபருக்கு விற்பனை செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரேஷன் கடை ஊழியர் உள்ளிட்ட 3 பேரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு புலனாய்வு துறையினர் கைதுசெய்தனர்.பங்காரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் வேலை செய்து வந்த சத்தியமூர்த்தி என்பவர், தனிநபருக்கு மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி விற்பனை செய்த வீடியோ வெளியானநிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.இதனைதொடர்ந்து, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, சத்தியமூர்த்தி உள்ளிட்ட 3 பேரை கைது செய்து, ஷேர் ஆட்டோ ஒன்றையும், 300 கிலோ ரேசன் அரிசியும் பறிமுதல் செய்தனர்.