தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே, அனுமதியின்றி செயல்பட்ட 4 கிரஷர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், வருவாய்த்துறையினர் மற்றும் கனிமவளத்துறையினர் நடத்திய ஆய்வின் போது, மாவட்டத்தில் 20 கிரஷர் ஆலைகள் தங்களது உரிமத்தை புதுப்பிக்காமலும், அனுமதியின்றி செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.