Also Watch
Read this
By: Manigandan Raja

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த எம் இடையப்பட்டியில் இருந்து தெத்தூர் வரை செல்லக்கூடிய சாலை 3,38,45, 000 ஒப்பந்தம் எடுக்கப்பட்டு தற்போது இரண்டடுக்கு சாலையாக அமைக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது.
மேலும் பழைய சாலையை அப்புறப்படுத்தி அதன் மீது ஜல்லி கற்களை மட்டும் கொட்டி வைத்துள்ளனர். வேலை தொடங்கி பல மாதங்கள் ஆன நிலையில் தற்பொழுது வரை முடியவில்லை.
இதனால் இப்பகுதியில் உள்ள இடையபட்டி , தளவாய் பட்டி, வடகம்பட்டி,மான் மாஞ்சாம்பட்டி, தெத்தூர்,ஆலம்பட்டி,போன்ற கிராமங்களுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் இருசக்கர
வாகனங்களில் சென்று வரும்போது வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும்.
பள்ளிக்கு செல்ல பேருந்தும் வராததால் பள்ளி மாணவ, மாணவிகள் கால தாமதமாகவே பள்ளிக்கு செல்லும் நிலை இதனால் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் எனக் கூறி இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் இன்று காலை 9 மணி அளவில் துவரங்குறிச்சி நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் எம் இடையபட்டி பிரிவு சாலை அருகே சாலை மறியல் ஈடுபட்டனர்.
சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் ரகுராமன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,பொறியாளர்,வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டடு விரைவில் சாலையை சீரமைக்கப்படும் என்று கூறியதை அடுத்து சாலை மறியல் தற்காலிகமாக கைவிட்டு கலைஞர் சென்றனர்.
இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved