தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வைப்பாற்றில் நள்ளிரவில் படுஜோராக மணல் கொள்ளை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வைப்பாற்றிலிருந்து நாள்தோறும் நள்ளிரவில் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள் மூலம் மணல் கொள்ளை நடைபெறுவதாகவும் இதனை காவல்துறையினரும் கண்டு காணமால் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரிடம், மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர், செய்தியாளரை காவலர் என நினைத்து கொண்டு பேசியது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. எனவே மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் மணல் திருட்டை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, உடந்தையாக செயல்படும் காவல்துறையினர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.