திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூக்களை எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றி சாமி தரிசனம் செய்தனர். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் காட்சியளித்தது காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.