திண்டுக்கல் மாவட்டம் பழநியில் கைது செய்யப்பட்ட பாஜக மகளிர் அணியினரை விடுவிக்க வலியுறுத்தி, பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாஜக மகளிர் அணியினரை அடைத்து வைத்திருந்த தனியார் மண்டபம் முன்பு மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்து, அருகில் இருந்த மற்றொரு மண்டபத்தில் அடைத்தனர்.