திருப்பூர் ரிதன்யாவின் பிறந்தநாளை ஒட்டி தமிழகத்தில் வரதட்சணை மற்றும் வன்கொடுமை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கப்படும் என அவரது பெற்றோர் அறிவித்துள்ளனர். அவிநாசி அருகே கைகாட்டிப்புதூர் பகுதியில் ரிதன்யா சோசியல் சர்வீஸ் அறக்கட்டளை மற்றும் பத்துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் மூலமாக பல்வேறு நோய்களுக்கான இலவச மருத்துவ சிகிச்சை முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.