உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், வீடுகள், உணவகங்கள் மண்டபங்கள், இறைச்சி கடைகள் மற்றும் சலூன் கடைகள் என பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுப்பொருள் மற்றும் குப்பைகள் சேலம் ரவுண்டானா மேம்பாலம் அருகில் சாலை ஓரம் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பைகளில் அதிகளவு புழுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுவது மட்டும் அல்லாமல் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு எற்பட்டுள்ளது.இதனால் இந்தப் பகுதியில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல்நலம் குறைவு ஏற்படுவதாக குற்றம்சாட்டிய அப்பகுதி மக்கள், இப்பகுதியில் கூடுதலாக குப்பை கிடங்கு அமைத்து தரவேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். Related Link ஆசிரியரின் செயலால் பெற்றோர் அதிர்ச்சி