Also Watch
Read this
By: Manigandan Raja

வாக்குப்பதிவு இயந்திரம் பழுது :
காத்திருந்த பொது மக்களுக்கு மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதி அடைந்த பொதுமக்கள்.. அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிஎஸ்ஐ எட்வர்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் காலை முதலே பகுதி மக்கள் வாக்களித்து வந்திருந்தனர்.
இந்நிலையில் வாக்குச்சாவடி 322ல் முதல் வாக்கு இயந்திரம் வேலை செய்யாததால் கடந்த மூன்று மணி நேரமாக பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.வாக்கு
இயந்திரத்தில் வாக்கு செலுத்த முடியவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில்.
தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்து மூன்று மணி நேரமாக சரி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.பின்னர் தேர்தல் அலுவலர்கள் மண்டல அலுவலகத்தில் இருந்து மாற்று பேட்டரியை கொண்டு வந்து சரி செய்தனர் வாக்கு இயந்திரம் பழுதானதால் 3 மணி நேரம் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
காத்திருந்த பொது பொதுமக்களுக்கு மின்விசிறி வசதி ஏற்பாடு செய்து கொடுக்காததால் வாக்குச்சீட்டை விசிறியாக பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved