Also Watch
Read this
By: Manigandan Raja

19வது திருமண விழாவை வெகுவிமர்சையாக கொண்டாடிய ஜோடி :
ஐஸ்வர்யா ராயை தனது உயிர் தோழி என்று பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் 19வது திருமண விழாவை அபிஷேக் பச்சனும் - ஐஸ்வர்யா ராயை வெகுவிமர்சையாக கொண்டாடினர்.
இதுகுறித்து பேசிய அபிஷேக் பச்சன் மகள் ஆராத்யாவை மிகச் சிறந்த பண்புகளுடன் வளர்த்ததற்கான முழுப் பெருமையும் ஐஸ்வர்யா ராயையே சேரும் என்று பாராட்டியுள்ளார்.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் மீண்டும் கார்த்தி :

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் படம் 2018-ம் ஆண்டில் வெளியாகி வெற்றிபெற்ற நிலையில், புதிதாக உருவாக உள்ள படத்தின் கதை விவாத பணிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருமணம் நின்று போனது குறித்த கேள்விக்கு ரித்விகா பதில் :

பிக்பாஸ் 2 சீசனில் பங்கேற்று சிறந்த போட்டியாளராக வெற்றி பெற்ற நடிகை ரித்விகாவின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் அதனை அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நடந்த கேள்வி, பதில் உரையாடலின் போது, உங்கள் திருமணத்தில் ஏதும் பிரச்சனையா? என கேள்வி எழுப்பிய ரசிகருக்கு, நினைத்த படி எதுவும் நடக்கவில்லை என பதில் அளித்தார்.
நான் சாதாரண நோக்கியா போனை தான் பயன்படுத்துகிறேன் :

சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருப்பதற்காக நான் ஒரு சாதாரண நோக்கியா செல்போனை பயன்படுத்துகிறேன் என முன்னணி இசை அமைப்பாளராக உருவெடுத்திருக்கும் சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார். என்னிடம் 1000-க்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன எனவும், 60 வயதிற்கு பிறகு என் உடல் நலம் பாதிக்கப்பட்டால் நான் அந்த பாடல்களை பயன்படுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகர் கவினின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியீடு :

நடிகர் கவின் நடிக்க உள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் பிரவீன் பரமசிவம் இயக்க உள்ள இப்படத்தை ஜெய்வர்தா தயாரிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள், மற்றும் படம் தொடர்பான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved