Also Watch
Read this
Posted on: Feb 08, 2026 11:29 AM
By: Manigandan Raja

வனப்பகுதியில் விடுவிப்பு :
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் உலா வருவதும் சிறுத்தை மற்றும் புலி ஆகிய விளங்குகள் ஊருக்குள் புகுந்து விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகளை வேட்டையாடுவதும் வாடிக்கையாகி வருகின்றன.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக புஞ்சைபுளியம்பட்டி மாராயிபாளையம் அருகே உள்ள மலை குன்று பகுதியில் பதுங்கி இருந்த இரண்டு சிறுத்தைகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விவசாயிகள் வளர்த்த வரும் வேட்டை நாய்கள் ஆடு உள்ளிட்டவைகளை வேட்டையாடி வந்த நிலையில் இந்த சிறுத்தைகளை பிடிக்க வேண்டும்.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் விளாமுண்டி வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர். இருப்பினும் கூண்டுக்குள் சிக்காமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை இன்று வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் சிக்கியது.
கூண்டுக்குள் சிக்கிய சிறுத்தையை வேன் மூலம் பத்திரமாக எடுத்துச் சென்று பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியான தெங்குமரஹாடா வனப்பகுதியில் விடப்பட்டது.
மேலும் மற்றொரு சிறுத்தையை பிடிக்க அதே பகுதியில் மீண்டும் கூண்டு வைத்துள்ளதாகவும் விரைவில் மற்றொரு சிறுத்தையும் பிடிபடும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved