news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ராமநாதபுரம் சீமை யாருக்கு?
tv

Also Watch

tv

Read this

ராமநாதபுரம் சீமை யாருக்கு?

வாக்காளப் பெருமக்களே... தேர்தல் 2026

37

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தென் மாவட்டத்தில் முக்கிய தொகுதியான ராமநாதபுரத்தில், யார் யாருக்கு சீட்டு என அதிமுக மற்றும் திமுகவில் தற்போதே போட்டி சூடுபிடித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எதிராக சொந்த கட்சி மாவட்ட செயலாளரே காய் நகர்த்தி வர, திமுகவில் சிட்டிங் எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்திற்கு எதிராக, அக்கட்சியில் புதிய வரவாக இணைந்த அன்வர் ராஜா சீட்டு கேட்டு நிற்பதால், குழப்பம் கும்மியடிக்க தொடங்கியுள்ளது.

* ராமநாதபுரம் தொகுதியில் யார் களமிறங்குவது என எதிர்பார்ப்பு
* 2016ல் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற மணிகண்டன்
* ஜெ. தலைமையிலான அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர்


தேர்தல் நெருங்கி விட்டாலே யார் யாருக்கு சீட்டு என்ற குழப்பம் எல்லா கட்சிகளிலும் தலையெடுக்க தொடங்கும். அப்படி, தென் மாவட்டத்தின் ராமநாதபுரம் தொகுதியில் யார் களமிறங்குவது என உடன்பிறப்புகளுக்கும், ரத்தத்தின் ரத்தங்களுக்கும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப துறையை கவனித்து வந்த மணிகண்டன், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் போது திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக நடிகை அளித்த புகாரில் சிக்கி, அமைச்சர் பதவியை பறி கொடுத்தார். இதனையடுத்து கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டாலும், ராமநாதபுரத்தில் இன்னும் மணிகண்டனுக்கு செல்வாக்கு அப்படியேதான் இருக்கிறது என்கிறார்கள். இந்த நிலையில், வருகிற 2026 தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் களம் இறங்க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சீட்டு கேட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், மாவட்ட செயலாளர் முனியசாமிக்கும், மணிகண்டனுக்கும் ஏழாம் பொருத்தமாக இருப்பதால் உள்ளடி அரசியல் ரெக்கை கட்டி பறப்பதாக சொல்கிறார்கள்.

திமுகவுக்கு எதிராக போராட்டம், ஆர்ப்பாட்டம் என கள அரசியலில் இன்னும் ஆக்டிவ்வாக இருந்தாலும், மணிகண்டனை தலைமையும் பெரிய அளவில் கண்டு கொள்ளாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதையே, தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொள்ள முனியசாமி தரப்பு முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால், மணிகண்டன் ஓரங்கட்டப்பட்ட பின்னர் தான் முனியசாமியின் செல்வாக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உயர தொடங்கியது என்ற நிலையில், மீண்டும் மணிகண்டனுக்கு சீட்டு வாங்கி கொடுப்பது யானை தன் தலையில் மண்ணை வாரி போடுவதற்கு சமம் என எண்ணும் முனியசாமி, முன்னாள் அமைச்சருக்கு சீட்டு கிடைக்க விடக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்து வருகிறாராம்.

* நடிகை அளித்த புகாரில் சிக்கினார்
* அமைச்சர் பதவி இழந்து ஓரங்கட்டப்பட்ட மணிகண்டன்
* மணிகண்டனுக்கு செல்வாக்கு அப்படியே இருக்கிறது


தற்போதைய சூழலில் ராமநாதபுரம் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்திற்கும் நல்ல ஆதரவு இருக்கும் நிலையில், அவருக்கு போட்டியாக மணிகண்டனை நிறுத்தினால் தான் போட்டி கடுமையாக இருக்கும் என கீழ்மட்ட அதிமுக நிர்வாகிகள் எண்ணினாலும், மாவட்ட செயலாளர் முனியசாமி மனம் போன போக்கில் செயல்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இருவருக்கும் இடையேயான உரசலில் தொகுதியை கை விட்டு விடுவோமா? என எம்.ஜி.ஆர். மாளிகை விசுவாசிகள் புலம்ப தொடங்கியுள்ளனர்.

* 2026 தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் களமிறங்க சீட்டு கேட்கும் மணிகண்டன்?
* அதிமுக மா.செ. முனியசாமிக்கும், மணிகண்டனுக்கும் ஏழாம் பொருத்தம்?


அதிமுகவில் சூழல் இப்படி என்றால், திமுகவில் சிட்டிங் எம்.எல்.ஏ.வுக்கு போட்டியாக இன்னும் 2 பேர் வரிசையில் நிற்பதாக சொல்கிறார்கள். எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தான், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் என்ற நிலையில், தொகுதியிலும், தலைமையிலும் நல்ல செல்வாக்கு இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இருப்பினும் கூட, சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மூத்த அரசியல்வாதியான அன்வர் ராஜாவும் ராமநாதபுரம் தொகுதியை கேட்டு நிற்பதால் சிக்கல் எழுந்திருக்கிறது. நேரடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமே அன்வர் ராஜா சீட்டு கேட்டு அணுகி வருவதாக சொல்கிறார்கள்.

* சிட்டிங் எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்திற்கு நல்ல ஆதரவு
* திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவும் சீட்டு கேட்கிறார் என தகவல்
* திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்பா ரகு சீட்டு கேட்கிறாராம்


இது ஒரு பக்கம் இருக்க, திமுக மாநில இளைஞரணி துணை செயலாளராக இருந்து வரும் இன்பா ரகு என்பவரும் உதயநிதி முலம் சீட்டுக்கு ரூட்டு போட்டு வருகிறாராம். உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்வுகளில் தவறாமல் ஆஜராகி விடும் இன்பா ரகு, சீட்டுக்காக கடுமையாக போராடி வருகிறார். என்னதான் போட்டி கடுமையாக இருந்தாலும் சிட்டிங் எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்திற்கு தான் வாய்ப்பு வழங்கப்படும் என உடன்பிறப்புகள் மத்தியில் பேசிக் கொள்ளப்படுகிறது. ஏனென்றால், சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் திமுகவை வெற்றி பெற வைத்தது, காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மீது தலைமைக்கு நல்ல அபிப்ராயத்தை கொடுத்திருக்கிறது. ஆகையால், மீண்டும் தனக்கு தான் திமுக தலைமை கிரீன் சிக்னல் காட்டும் என்ற நம்பிக்கையில் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், தொகுதி மக்களுக்கும் பரிசு பொருட்களை அள்ளி வீசி வருகிறார்.


Related Link
பெரம்பூரில் களம் காணும் விஜய்?

பெரம்பூரில் களம் காணும் விஜய்?

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
44 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved