புதுச்சேரியில், மாற்றுத்திறனாளிகளுக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மூன்று சக்கர வாகனங்களை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சமூக நலத்துறை மூலம் இந்திரா நகர் தொகுதிக்கு உட்பட்ட 8 மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.இதில் அரசு கொறடா ஆறுமுகம், சமூகநலத்துறை இயக்குநர் ராகினி, துணை இயக்குநர் ஆறுமுகம் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.