Also Watch
Read this
By: Web Team

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண், மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி உறவினர்கள் மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோபாலபுரத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மனைவி சுதாவுக்கு கடந்த திங்கட்கிழமை குழந்தை பிறந்த நிலையில், திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். கருப்பசாமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved